பூப்பூக்கும் புளோக்குகள்

பூப்பூக்கும் புளோக்குகள்

fallback-0

15 Nov 2026 - 5:45 am

1 mins read

முட்டைக்குள் இருந்து.மூக்கை நீட்டி்நீட்டி பசித்தழுகின்றன

இரு குஞ்சுகள்

உச்சுக் கொட்டுகிறது பல்லி

வந்து போகிறது வண்ணத்தி

வீட்டுக்குள் நுழைந்து சன்னல் புறாவை விரட்டுகிறது பூனை

பூனையைச் சீண்டுகிறது பூங்காவிலிருந்து வந்த குரங்கு

...

செருப்புகள் சாமான்களோடு

என் சிறிய வீட்டின் நான்கடிப் பாதையின் ஒற்றைச் செடியை

வனமாக்கி விட்டது

சாம்பல் குருவி

அடுக்குமாடியின் வாசல்கள், சன்னல்களில் காற்று

புகுந்து வர

எங்கும் குழலிசை