போக்குவரத்துக் குற்றங்களுக்காக 13 வெளிநாட்டு ஓட்டுநர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை

போக்குவரத்துக் குற்றங்களுக்காக 13 வெளிநாட்டு ஓட்டுநர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை

1 mins read
842b0d1b-a10e-436d-8c3c-0bede88fe74e
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போக்குவரத்துக் குற்றங்கள், வரிசையில் காத்திருக்காமல் நடுவே செல்வது போன்ற தவறுகளுக்காக வெளிநாட்டு வாகனங்களை ஓட்டிய 13 ஓட்டுநர்கள் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 13லிருந்து 22ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் முறியடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யு-டர்ன் செய்து மீண்டும் வரிசையில் நிற்குமாறு மேலும் 43 வாகனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேல்நடவடிக்கை எடுப்பதற்காக 29 ஓட்டுநர்கள், போக்குவரத்துக் காவல்துறையிடம் அனுப்பப்பட்டனர்.

போக்குவரத்துக் குற்றங்கள், வரிசையில் காத்திருக்காமல் நடுவே செல்வது உள்ளிட்ட அபாயம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களைத் தடுக்கவும் அடையாளம் காணவும் முறியடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) அறிக்கை மூலம் தெரிவித்தது. இரட்டை வெள்ளைக் கோடுகளில் வாகனம் ஓட்டியது, வளையக்கூடாத இடங்களில் யு-டர்ன் செய்தது, அபாயம் விளைவிக்கக்கூடிய வகையில் வாகனத்தை நிறுத்தியது உள்ளிட்ட தவறுகளை ஓட்டுநர்கள் இழைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சோதனைச்சாவடிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறி அல்லது தங்களின் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளாமல் மற்ற ஓட்டுநர்களுக்கு ஆபத்து விளைவிப்பதைத் தாங்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் கருத்தில்கொள்வதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் எடுத்துரைத்தது.

குறிப்புச் சொற்கள்