2021-2025 காலத்தில் 20 சட்டவிரோதப் பல் மருந்தகங்களிடம் விசாரணை

2021-2025 காலத்தில் 20 சட்டவிரோதப் பல் மருந்தகங்களிடம் விசாரணை

1 mins read
6d3b6ef5-6261-4e67-a4b5-f1b16a2f1b7a
சட்டவிரோத பல் மருத்துவச் சேவைகளை நாடவேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. - சித்திரிப்பு: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொந்தமாகப் பல் மருத்துவம் கற்றுக்கொண்டவர் சிகிச்சையளித்த பிறகு மாது ஒருவரால் தனது பற்களுக்கு நடுவே உள்ள பகுதிகளைச் சுத்தம் செய்ய முடியாமல் போனது.

அதேபோல், வேறொரு ‘பல் மருத்துவர்’ வீட்டிலேயே சேவைகளை வழங்கி வந்தார். அவரிடம் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் போனது.

இவை, 2021லிருந்து 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் இணைந்து விசாரணை நடத்திய சுமார் 20 சட்டவிரோத பல் மருத்துவச் சிகிச்சை வழக்குகளில் இவ்விரண்டு பிரச்சினைகளும் அடங்கும். அவற்றில் பெரும்பாலானவை ‘வெனியர்ஸ்’ (veneers), ‘பிரேசஸ்’ போன்ற பல் மருத்துவச் சேவைகள் தொடர்பானவை என்று சுகாதார அறிவியல் ஆணையத்தின் தலைவர் ரேமண்ட் சுவா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்தார்.

தவறாகச் செய்யப்பட்ட பல் மருத்துவச் சிகிச்சைகள், அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் சிகிச்சை பெறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்க உதவுகின்றன என்று சுகாதார அமைச்சின் சுகாதார விதிமுறைப் பிரிவு சுகாதாரத் துணைத் தலைமைச் செயலாளருமான பேராசிரியர் சுவா குறிப்பிட்டார்.

இச்சம்பவங்கள், சட்டவிரோத பல் மருத்துவச் சேவைகளை நாடுவதிலிருந்து மக்களைத் தவிர்க்கச் செய்யும் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்