ஆயுதப் படை வீரர்களுக்கு ஏற்படும் தீக்காயச் சம்பவங்கள் சரிவு

ஆயுதப் படை வீரர்களுக்கு ஏற்படும் தீக்காயச் சம்பவங்கள் சரிவு

1 mins read
557d21d5-313c-4b3c-a0ba-762df7e04b6c
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீயை அணைக்க முற்படும்போது சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் தீக்காயங்களுக்கு உள்ளாவது குறைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஏழாக இருந்த தீக்காய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இரண்டாக சரிந்துள்ளது.

மேலும், 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட தீச்சம்பவங்களில் ‘ஹீட்ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்பத் தாக்கத்தால் எந்த வீரரும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

2021ஆம் ஆண்டு 100,000 கி.மீட்டருக்கு 3.04 ஆக இருந்த சிங்கப்பூர் ஆயுதப் படை வாகன விபத்தின் விகிதம் கடந்த ஆண்டு 100,000 கி.மீட்டருக்கு 2.54 ஆக சரிந்துள்ளதாகத் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் தெரிவித்தார். 

வாகன விபத்துகளின் குறிப்பிட்ட எண்ணிக்கையை அவர் தெரிவிக்கவில்லை.

சிங்கப்பூர் ஆயுதப்படையின் தலைமைக் கண்காணிப்பாளர் அலுவலகம் நடத்திய பாதுகாப்பு தணிக்கைகள், மறுஆய்வு செயல்முறைகள் பற்றிய விவரங்களை வழங்கும்படி நாடாளுமன்ற நியமன உறுப்பினர் நீல் பரேக் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், திரு ஹெங் அக்டோபர் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மேற்கூறிய புள்ளிவிவரங்களை வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்