2023 - சிங்கப்பூரின் ஆக வெப்பமான 4வது ஆண்டு

சிங்கப்பூரின் ஆக வெப்பமான நான்காவது ஆண்டாக 2023 பதிவாகியிருக்கிறது.

கடந்த 1929ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2023 மே, அக்டோபர் மாதங்களில் சிங்கப்பூரில் வெயில் வாட்டியெடுத்தது.

சாங்கி வானிலை மையப் புள்ளிவிவரப்படி, சென்ற ஆண்டு சிங்கப்பூரின் சராசரி வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ். 1997, 2015 ஆண்டுகளின் சராசரி வெப்பநிலையும் இதுதான்.

கடந்த 2016, 2019ஆம் ஆண்டுகளில் 28.4 டிகிரி செல்சியசும் 1998ஆம் ஆண்டில் 28.3 டிகிரி செல்சியசும் சராசரி வெப்பநிலையாகப் பதிவாகி இருந்தது.

கடைசி ஒன்பது மாதங்களிலும் சராசரிக்கும் மேலான வெப்பநிலை பதிவானது என்று சாங்கி வானிலை மையம் தெரிவித்தது.

சென்ற ஆண்டில் சிங்கப்பூரின் வெப்பநிலைப் பதிவுகள், முன்னைய உச்ச அளவுகளில் கிட்டத்தட்ட 20ஐத் தொட்டன அல்லது அவற்றை விஞ்சின.

ஆக அதிக அன்றாட வெப்பநிலையாக, அங் மோ கியோவில் 2023 மே 13ஆம் தேதி 37 டிகிரி செல்சியஸ் பதிவானது. 1983ல் தெங்காவிலும் இதே வெப்பநிலை பதிவாகியிருந்தது.

29.5 டிகிரி செல்சியஸ் என்ற சராசரி வெப்பநிலையுடன், ஆக வெப்பமான மாதம் என்ற சாதனையை 1998 மார்ச்சுடன், 2023 மே மாதம் பகிர்ந்துகொண்டது.

இருந்தபோதும், 2023ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் வழக்கத்தைவிட குளிர்ச்சியாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் 2023 மார்ச் மாதமே ஆகக் குளிர்ந்த மார்ச் மாதம்.

அத்துடன், மழைப்பொழிவும் அதிகமாக இருந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல், 2023ஆம் ஆண்டில்தான் அதிக மழை பொழிந்ததாகச் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை (ஜனவரி 22) தெரிவித்தது.

கடந்த 30 ஆண்டுச் சராசரியை ஒப்புநோக்க, 2023ல் வருடாந்திர மழைப்பொழிவு 13.1 விழுக்காடு கூடுதலாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!