தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈ‌‌சூன் அவென்யூ 7இல் 3வது முறையாக திடீர் வெள்ளம்

1 mins read
bafdc9b8-c2e6-4b8d-a012-14921b5d3b27
திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பொதுப் பயனீட்டுக் கழகம் அதிகாரிகளை அனுப்பியது. - படம்: ஃபேஸ்புக்/ பொதுப் பயனீட்டுக் கழகம்

சிங்கப்பூரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) பெய்த கனத்த மழையால் ஈ‌சூன் அவென்யூ 7இல் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

தேசியத் நீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) வெள்ளம் பற்றி பிற்பகல் 3.30 மணியளவில் அதன் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டது. பாதிக்கப்பட்டோருக்கு உதவ அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அனுப்பியதாக அது குறிப்பிட்டது.

ஈ‌சூன் ஸ்ட்ரீட் 22இல் கடந்த 9 நாள்களில் மூன்றாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25 நிமிடங்களில் அது வடிந்தது.

சிங்கப்பூரில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பியுபி தெரிவித்தது.

ஏப்ரல் 20ஆம் தேதி கொட்டித் தீர்த்த மழையால் புக்கிட் தீமா வட்டாரத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழந்தது.

ஏப்ரல் 13, 15ஆம் தேதிகளில் கனத்த மழையால் ஈ‌சூன் அவென்யூ 7 வெள்ளம் பெருகியது.

ஏப்ரல் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் அடிக்கடி மழை பெய்தபோதும் 9 நாள்களில் பதிவான வெப்பநிலை 34 டிகிரி செல்சியசைத் தாண்டியது.

ஏப்ரல் 12ஆம் தேதி பாய லெபார் வட்டாரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ்.

குறிப்புச் சொற்கள்