மாது ஒருவரைக் கத்தியால் தாக்கியதாக 46 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளார்.
புக்கிட் மேராவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்பில் சனிக்கிழமை (ஜூலை 4) நடந்த அச்சம்பவம் குறித்து இரவு 7.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
காயமடைந்த 43 வயது மாது சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 46 வயது மாது கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரும் அறிமுகமானவர்கள்.
வீவக அடுக்குமாடியின் தரைத் தளத்தில் ரத்தக்கறை காணப்பட்டதாக சின் மின் டெய்லி செய்தி குறிப்பிட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

