பாலர் பள்ளிப் பிள்ளைகளைத் துன்புறுத்தியதற்காக 35 வயது சிங்கப்பூர் மாதுக்கு புதன்கிழமை (அக்டோபர் 29) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாலர் பள்ளி குழந்தை பராமரிப்புச் சேவை நிலையம் ஒன்றில் பணிபுரிந்த அந்த மாது ஆத்திரத்தில் நான்கு மற்றும் ஐந்து வயது நிரம்பிய மூன்று குழந்தைகளைத் துன்புறுத்தியுள்ளார். 2024 ஜூலையில் ஒரு குழந்தையைத் துன்புறுத்திய இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
குழந்தைகளின் அடையாளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அந்த மாது, பாதிக்கப்பட்ட குழந்தைகள், குற்றம் நடந்த இடம் உள்ளிட்ட விவரங்களை வெளியிடப்படவில்லை.
மாதின் நடத்தை காரணமாக குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குச் செல்லத் தங்கள் பிள்ளை பயப்படுவதாக ஒரு பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாதின் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.
தமது வேலையின் ஒரு பகுதியாக, வார நாள்களில் கிட்டத்தட்ட 12 அல்லது 13 குழந்தைகளைப் பராமரிப்பு நிலையத்தில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை அந்த மாது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து பராமரிப்பு நிலைய ஊழியர்கள் சிசிடிவி காணொளிக் காட்சிகளைப் பார்த்து, காவல்துறையில் புகார் செய்தனர்.
2025ஆம் ஆண்டில் குற்றவாளி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

