ஈசூன் வீட்டில் தீ; 100 பேர் வெளியேற்றம்

ஈசூன் வீட்டில் தீ; 100 பேர் வெளியேற்றம்

1 mins read
040ed362-f1cb-4be7-ba2a-7d07ccb03e92
வசிப்பறை முழுவதையும் சூழ்ந்த தீயை, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயணைப்பாளர்கள் அணைத்தனர். - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) தீ மூண்டதைத் தொடர்ந்து ஏறக்குறைய 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

புளோக் 431சி ஈசூன் அவென்யூ 1ல் நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து மாலை 6.40 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

புளோக்கின் நான்காவது மாடியில் உள்ள அந்த வீட்டு வாசலுக்கு வந்தடைந்த தீயணைப்பாளர்கள், புகை சூழ்ந்த வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர். அப்போது அந்த வீட்டில் எவரும் இல்லை.

வசிப்பறை முழுவதையும் சூழ்ந்த தீயை, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயணைப்பாளர்கள் அணைத்தனர். வீட்டின் மற்ற பகுதிகளில் புகை படிந்திருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த புளோக்கில் மூன்றாவது மாடி முதல் ஆறாவது மாடி வரை உள்ள வீடுகளில் வசிப்போர் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஈசூன்தீசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை