ஐயோன் ஆர்ச்சர்ட் மால் கடைத்தொகுதி அருகே விபத்து: மூவர் மருத்துவமனையில்

ஐயோன் ஆர்ச்சர்ட் மால் கடைத்தொகுதி அருகே விபத்து: மூவர் மருத்துவமனையில்

படம்: SCREENGRAB FROM BOW3I/TIKTOK

27 Nov 2026 - 6:53 pm

1 mins read

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஐயோன் ஆர்ச்சர்ட் மால் கடைத்தொகுதியின் வெளியே இரு கார்களுக்கு இடையே வியாழக்கிழமை (நவம்பர் 26) இரவு நிகழ்ந்த விபத்தில் மூவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (எஸ்சிடிஎஃப்) காவல்துறையும் ஸ்காட்ஸ் ரோடு, ஆர்ச்சர்ட் ரோடு சாலைச் சந்திப்பில் நடந்த விபத்து குறித்து அன்றைய தினம் இரவு 8.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தன.

அந்தக் கார்களின் 49, 71 வயதான இரு ஆண் ஓட்டுநர்களுடன் ஒரு 57 வயது ஆண் பயணியும் மருத்துவமனைக்கு சுயநினைவோடு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது. விபத்துக்குப் பிறகு வெளிவந்த சமூக ஊடகக் காணொளியில் ஒரு வெள்ளை நிறக் கார் சாலைச் சந்திப்பின் நடுவே அதன் முன்பாகம் சேதமடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனைக் கடந்து போக்குவரத்து செல்வதையும் அவற்றுக்கு மேல் கிறிஸ்துமஸ் சிறப்பு அலங்கார விளக்குகள் ஒளிர்வதையும் பார்க்கமுடிந்தது.

விபத்துக்குள்ளான ஒரு சாம்பல் நிறக்கார் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதும் அதனைச் சுற்றி பொதுமக்கள் கூடியுள்ளதும் காணொளியில் தெரிந்தது.

குறிப்புச் சொற்கள்