தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்து: மருத்துவமனையில் இருவர்

1 mins read
fd0cd466-c360-40d1-b63e-f409177e7700
தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில், டெய்ரி ஃபார்ம் நுழைவாயிலுக்கு முன்னதாக விபத்து நிகழ்ந்தது என்றும் அதுதொடர்பாக காலை 9.45 மணி அளவில் தகவல் கிடைத்தது என்றும் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. - படம்: ஷின் மின்

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்தை அடுத்து, இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து நவம்பர் 20ஆம் தேதி காலை நிகழ்ந்ததாகக் காவல்துறை கூறியது.

தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில், டெய்ரி ஃபார்ம் நுழைவாயிலுக்கு முன்னதாக விபத்து நிகழ்ந்தது என்றும் அதுதொடர்பாக காலை 9.45 மணி அளவில் தகவல் கிடைத்தது என்றும் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

மோட்டார் சைக்கிள் ஒன்று இன்னொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி பிறகு அவ்விடத்தில் நிறுத்தாமல் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் மற்றொருவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.

2023ஆம் ஆண்டில் சாலை விபத்து காரணமாக 136 மாண்டனர்.

2022ஆம் ஆண்டைவிட இது 25.9 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்