மூக்கடைப்பு நீக்க மருந்தைக் கவனத்துடன் எடுத்துக்கொள்ள அறிவுறுத்து

1 mins read
df05af31-d732-40a8-a678-5bade096fa7a
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டுள்ள 30 மருந்துகளில் சூடோஎஃபிட்ரின் அடங்கியுள்ளது. - மாதிரிப்படம்: அன்ஸ்பிளாஷ்

தீவிர மருத்துவப் பிரச்சினைகள் இல்லையெனில், மூக்கடைப்பு நீக்க மருந்துப்பொருளான சூடோஎஃபிட்ரின் (Pseudoephidrine) அடங்கியுள்ள மருந்துகளைப் புறக்கணிக்கத் தேவையில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற மருத்துவப் பிரச்சினைகள் இருப்பவர்கள் அத்தகைய மருந்துகளை எடுத்துக்கொண்டால் அது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், மருத்துவர் குறிப்பிட்டுள்ள மருந்து அளவைப் பின்பற்ற வேண்டும் என்றும் குமட்டல், பார்வைப் பிரச்சினை போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னணி மருந்து நிறுவனமான ஜிஎஸ்கே, ‘ஸர்டெக்-டி’ (Zyrtec-D) மருந்து தயாரிப்பை நிறுத்திக்கொள்ளப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தது. ஒவ்வாமை முறிவு மற்றும் மூக்கடைப்பு நீக்க மருந்தான அதில் சூடோஎஃபிட்ரின் அடங்கியுள்ளது.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டுள்ள 30 மருந்துகளில் சூடோஎஃபிட்ரின் அடங்கியுள்ளது.

இதனிடையே, இதயப் பிரச்சினைகள் இருப்போர் சூடோஎஃபிட்ரின் அடங்கியுள்ள மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், கண்ணழுத்தம், ‘புரோஸ்டேட்’ சுரப்பி வீக்கம், கல்லீரல் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் இருப்போரும் அத்தகைய மருந்துகளை எடுத்துக்கொள்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்