மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கான பாராட்டு விருந்து தள்ளிவைப்பு

1 mins read
b5ae0650-d888-4de4-b8a7-113ab0e88638
மூத்த அமைச்சர் லீ சியன் லூங். - படம்: பெரித்தா ஹரியான்

முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங்கிற்கு இந்தியச் சமூகத்தின் சார்பில் நடைபெறவிருந்த பாராட்டு விருந்து நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திரு லீயின் சகோதரி டாக்டர் லீ வெய் லிங் புதன்கிழமை (அக்டோபர் 9) காலமானதையடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டிற்குத் திரு லீ ஆற்றிய பெரும்பங்களிப்பிற்காக அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்ச்சி, அக்டோபர் 10ஆம் தேதி வியாழக்கிழமை இரவு இடம்பெறுவதாக இருந்தது.

நிகழ்ச்சிக்கான புதிய தேதி உறுதிசெய்யப்பட்டதும் அதுகுறித்து அறிவிக்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்