பீஷான் வட்டாரத்தில் உள்ள மருந்தகம் ஒன்று செயல்படுவதற்கான உரிமத்தை சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 24) மீட்டுக்கொண்டது.
நோயாளிகளுக்குப் பரிந்துரைத்து வழங்கப்படும் மருந்துகளைப் பலமுறை முறையாகக் கட்டுப்படுத்தாததே அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்ஸோடியேஸப்பீன்ஸ் (benzodiazepines) போன்ற மருந்து வகைகள் அவற்றில் அடங்கும்.
512 பீஷான் ஸ்திரீட் 13ல் இருக்கும் புரூடன்ஸ் ஃபேமிலி கிளினிக் (Prudence Family Clinic) இனி அதன் வளாகத்தில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்க முடியாது என்று சுகாதார அமைச்சு சனிக்கிழமையன்று (ஜனவரி 25) தெரிவித்தது. காணொளிவழி வழங்கப்படும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளும் அவற்றில் அடங்கும்.
இருமலுக்கு வழங்கப்படும் கோடீன், பென்ஸோடியேஸப்பீன்ஸ் உள்ளிட்ட மருத்து வகைகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைத்து வழங்குவதன் தெட்ர்பில் அந்த மருந்தகம் பலமுறை சுகாதாரப் பராமரிப்புச் சேவை சட்டத்தை மீறியதாக சுகாதார அமைச்சு விசாரணையில் கண்டுபிடித்தது.
எடுத்துக்காட்டாக, தனது மருத்துவர்கள், ஒரே நேரத்தில் ஒரு நோயாளிக்கு பென்ஸோடியேஸப்பீன்ஸ் அல்லது மத்தகைய மற்ற மருந்து வகைகளில் ஒன்றுக்கும் அதிகமானவற்றைப் பரிந்துரைப்பதைத் தடுத்த அந்த மருந்தகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

