தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் தேசிய கொடியைத் தவறாக அச்சிட்ட பிரிட்டன் சஞ்சிகை

1 mins read
b45bc55b-4696-446f-8725-964c7f0cd786
படம்: ஃபேஸ்புக் -

பிரிட்டனின் பிரபல சஞ்சிகையான 'தி சன்', சிங்கப்பூரின் தேசிய கொடிக்குப் பதிலாக சீனாவின் தேசியக் கொடியைத் தவறாக அச்சிட்டுள்ளது.

கார் ஓட்டுநர் லூயிஸ் ஹாமில்டன் குறித்து அந்த சஞ்சிகை ஒரு கட்டுரை எழுதியது. அதில் 2023ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் கார் பந்தயத்துக்கான கால அட்டவணையும் இருந்தது.

அட்டவணையில் சிங்கப்பூரில் செப்டம்பர் 17ஆம் தேதி நடக்கும் பந்தயமும் இருந்தது. அட்டவணையில் பந்தயத்தை ஏற்று நடத்தும் நாட்டின் பெயரும் அதன் கொடியும் அருகருகே இருந்தன.

ஆனால் சிங்கப்பூரின் பெயருக்கு அருகில் சீனாவின் தேசியக்கொடி இடம்பெற்றிருந்தது.

சஞ்சிகை ஜூன் 1 வெளியிட்ட செய்தியில் அந்த தவறு இடம்பெற்றுள்ளது.

அதே கால அட்டவனைப்படம் ஜூன் 4 வெளியான மற்றொரு செய்தியிலும் அந்த சஞ்சிகை பயன்படுத்தியுள்ளது.

நாட்டுக்கொடி மாறியதை இணையவாசிகள் சிலர் கண்டித்துள்ளனர்.

நாட்டுக் கொடியைத் தவறாக அச்சிட்டது குறித்து 'தி சன்'னிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பதில் கேட்டுள்ளது.

இவ்வாண்டு மொத்தம் 23 ஃபார்முலா ஒன் கார் பந்தயங்கள் இடம்பெறுகின்றன.

இதுவரை 8 பந்தயங்கள் முடிந்துள்ளன, அதில் இத்தாலி கார் பந்தயம் கடும் மழை, வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியனான ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 170 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்