தீவிபத்தில் சேதமடைந்த கிராஞ்சி கிடங்கை மூட கட்டட, கட்டுமான ஆணையம் உத்தரவு

1 mins read
4c679567-fb6f-463b-8878-cdc6e0076cd5
ஏழு ஆண்டுகளில் நான்காவது முறையாக கிராஞ்சி கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிராஞ்சி கிரசென்ட்டில் உள்ள மறுசுழற்சி, கழிவு நிர்வாக நிறுவனமான ‘வா & ஹுவா’ பயன்படுத்தி வந்த கிடங்கில் பிப்ரவரி 19ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது.

கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீவிபத்து ஏற்பட்ட கிடங்கை மூட கட்டட, கட்டுமான ஆணையம் பிப்ரவரி 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

மேலும், கிடங்கின் உலோகக் கூரையும் அலுவலகக் கட்டடக் கூரையின் ஒரு பகுதியும் தீவிபத்துக்குப் பிறகு இடிந்து விழுந்ததை ஆய்வின்போது கண்டறிந்ததாக ஆணையம் கூறியுள்ளது.

அருகிலுள்ள கட்டடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட கட்டடங்களின் கட்டமைப்புகளை மதிப்பீடு செய்வதற்கும் அபாயங்களைக் குறைப்பதற்கும் தேவையான உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கு ஒரு தொழில்முறை பொறியாளரை நியமிக்குமாறு உரிமையாளருக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

விரிவான சோதனைகளை மேற்கொண்டு நிரந்தர சீரமைப்புப் பணிகளைப் பொறியாளர் முன்மொழிய வேண்டும் என அது தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்