சிங்கப்பூர் அனைத்துலக மாரத்தான் போட்டிக்கு பிஒய்டி பிரதான ஆதரவாளர்

சிங்கப்பூர் அனைத்துலக மாரத்தான் போட்டிக்கு பிஒய்டி பிரதான ஆதரவாளர்

2 mins read
1550c374-08c8-4689-82a7-89ab9a2ab4cc
கடந்த முறை நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பொதுமக்கள். - கோப்புப் படம்: ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி

சிங்கப்பூர் அனைத்துலக மாரத்தான் போட்டிக்கு சீன கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி பிரதான ஆதரவாளராக மார்ச் 17ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தப் போட்டி டிசம்பர் 4 முதல் டிசம்பர் 6 வரை நடைபெறுகிறது. ஐந்து கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் போட்டிகள் டிசம்பர் 4ஆம் தேதி இரவு நடைபெறும். இதனைத் தொடர்ந்து அரை மாரத்தான் டிசம்பர் 5ஆம் தேதி காலையும் மாரத்தான் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி காலையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஓட்டப்போட்டி டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

ஏப்ரல் மாதம் பதிவு தொடங்கப்படுகிறது.

24ஆம் ஆண்டிலிருந்து இந்த மாரத்தான் போட்டிக்கு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆதரவளித்து வந்தது.

முதல் முறையாக பிஒய்டி நிறுவனம், இப்போட்டிக்கு பிரதான ஆதரவாளராக அறிமுகமாகியுள்ளது.

“தேசிய மாரத்தான் ஒரு பெருமைமிகு நிகழ்வாகும். பகிரப்பட்ட நோக்கம், விடாமுயற்சிக்காக சமூகங்களை ஒருங்கிணைக்கும் இந்தப் போட்டியின் அடுத்த அத்தியாயத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம்,” என்று பிஒய்டி சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

அடிடாஸ் மற்றொரு ஆதரவாளராகும். இந்நிலையில் போட்டியின் பெயர் பிஒய்டி சிங்கப்பூர் அனைத்துலக மாரத்தான் என மாற்றப்பட்டுள்ளது. அதனை அடிடாஸ் வழங்குகிறது.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், அதிகாரபூர்வ வங்கியாகத் தொடர்ந்து தனது பங்களிப்பை அளிக்கவிருக்கிறது.

இவ்வாண்டு மூன்று போட்டிகளின் பிரிவுகளுக்கு பிஒய்டி மாரத்தான், அடிடாஸ் அரை மாரத்தான், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் 10 கிலோ மீட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பிரிவுகளிலும் அதிகபட்சமாக 52,000 பேர் பங்கேற்கலாம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இது, 2025ஆம் ஆண்டின் நிகழ்ச்சியோடு ஒப்பிடுகையில் குறைவு. அப்போது 55,000 பேர் பங்கேற்றனர்.

இறுதிக் கட்டத்தை எட்டும் நேரத்தில் நெரிசல் ஏற்படுவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்