சிற்றுந்துடன் மோதியதை அடுத்து கார் குப்புறக் கவிழ்ந்த சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 18) நிகழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து, காரை ஓட்டிச் சென்ற 81 வயதுப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பிராடல் சாலையை நோக்கிச் செல்லும் அப்பர் தாம்சன் சாலையில் நேர்ந்த அவ்விபத்து குறித்து காலை 8.55 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த மூதாட்டி சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
சிற்றுந்தின் 55 வயது ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்து தொடர்பான காணொளி இணையத்தில் பகிரப்பட்டது. அதில், சிவப்பு நிற கார் ஒன்று கதவுகள் திறந்த நிலையில் நடைபாதையில் குப்புறக் கவிழ்ந்து கிடப்பதைக் காண முடிகிறது. அதற்கருகே, சாலையில் ஒரு தூக்குப் படுக்கையில் ஒருவர் படுக்க வைக்கப்பட்டிருந்ததையும் அக்காணொளி காட்டியது.
கூடுதல் தகவல்களுக்காக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையைத் தொடர்புகொண்டது.