சிங்கப்பூரில் மின்வாகன விற்பனையில் சீனாவின் ‘பிஒய்டி’ முதலிடம்

சிங்கப்பூரில் மின்வாகன விற்பனையில் சீனாவின் ‘பிஒய்டி’ முதலிடம்

2 mins read
aa52267b-bc54-469c-a359-fc4ac7a6fbed
சிங்கப்பூரில் அண்மையில் நடந்த மாபெரும் வாகனக் கண்காட்சியில் வரிசையில் வைக்கப்பட்டுள்ள ‘பிஒய்டி’ மின்வாகனங்கள். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் விற்பனையாகும் மின்வாகனங்களின் எண்ணிக்கையில் சீனாவின் ‘பிஒய்டி’ முதலிடத்தை இரண்டாம் ஆண்டாகத் தக்கவைத்துள்ளது.

இங்கு 2025ஆம் ஆண்டு விற்பனையான புதிய வாகனங்களில் ஐந்தில் ஒரு பங்கு சீனாவின் பிஒய்டி விளம்பர முத்திரை பதித்த வாகனங்களாகும்.

மிகவும் பிரபலமடைந்து வரும் மின்வாகனங்கள் கடந்த ஆண்டு நடந்த புதிய வாகன மொத்த விற்பனையில் 45 விழுக்காடு இடம்பிடித்துள்ளன.

சீனத் தயாரிப்பான பிஒய்டியின் 11,184 மின்வாகனங்கள் 2025ஆம் ஆண்டு விற்கப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் விற்கப்பட்டதைவிட 80.6 விழுக்காடு அதிகமாகும்.

கடந்த 2025ஆம் ஆண்டில் மொத்தம் 23,684 புதிய மின்வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. அந்த ஆண்டில் விற்கப்பட்ட கார்களில் மின்வாகனங்கள் மிகவும் பிரபலமாகி, அவற்றின் விற்பனை அதற்கு முந்தைய ஆண்டைவிட 45 விழுக்காடு ஏற்றம் கண்டது.

வாகனப் பதிவுகளில் பிஒய்டி தவிர்த்து, ‘ஜிஏசி’, ‘எக்ஸ்பெங்’, ‘எம்சி’, ‘சீக்ஆர்’ போன்ற விளம்பரப் பெயர்களைக் கொண்ட சீன மின்வாகனங்களும் முன்பதிவுகளில் முதல் பத்து நிலைகளில் உள்ளடங்கியுள்ளன.

சிங்கப்பூரில் மட்டும் பிஒய்டியின் 10,000 மின்வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஜப்பானின் ‘டொயோட்டா’ 7,466 வாகனங்களை விற்பனை செய்து இரண்டாம் இடத்திலும் ஜெர்மனியின் ‘பிஎம்டபுள்யூ’ 5,091 வாகனங்களை விற்று மூன்றாம் நிலையிலும் வந்தன. அவ்விரண்டு வகை வாகனங்களும் 2023ஆம் ஆண்டும் அதே நிலையில் இடம்பெற்றன.

நான்காம் இடத்தில் ஜப்பானின் ‘ஹோன்டா’ வாகனம் வந்தது. அதன் கார்கள் பாதி பெட்ரோல் பாதி மின்னூட்டு செய்துகொள்ளும் வசதியுடையவை. அமெரிக்காவின் ‘டெஸ்லா’ ஐந்தாம் நிலையை எட்டியது. அந்த வகை மின்வாகனங்கள் 3,476 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகின.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 52,678 புதிய கார்களின் மொத்த எண்ணிக்கையில் 23,684 கார்கள் மின்வாகனங்கள் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (ஜனவரி 22) விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதன்முறையாக மின்வாகனங்கள் பெட்ரோல் வாகனங்களைவிட அதிகம் விற்பனையாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்