தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லாப் பிரிவுகளிலும் ‘சிஒஇ’ கட்டணம் குறைந்தது

1 mins read
5efe6095-fb24-4928-a274-81d8f61f96a8
மோட்டார்சைக்கிள்களுக்கான பிரிவில்தான் சிஒஇ கட்டணம் ஆக அதிகமாகக் குறைந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஒஇ) கட்டணம் புதன்கிழமையன்று (ஜனவரி 22) நடந்த ஏலக்குத்தகையில் எல்லாப் பிரிவுகளிலும் குறைந்தது.

வரும் பிப்ரவரி மாதம் 8.2 விழுக்காடு கூடுதலாக சிஒஇ ஏலக்குத்தகைகள் வழங்கப்படவிருக்கும் நிலையில் கட்டணக் குறைவு பதிவாகியுள்ளது.

மோட்டார்சைக்கிள்களுக்கான சிஒஇ கட்டணம் ஆக அதிகமாகக் குறைந்தது. அப்பிரிவில் கட்டணம் 14.2 விழுக்காடு சரிந்து 7,721 வெள்ளியாகப் பதிவானது.

பெரிய கார்களுக்கான பிரிவு, பொதுப் பிரிவு ஆகியவற்றில் கடந்த சிஒஇ நடவடிக்கையில் 13 மாதங்களில் காணாத ஏற்றம் பதிவானது. இப்போது அவ்விரு பிரிவுகளிலும் கட்டணம் குறைந்தது.

சிறிய, குறைந்த சக்திவாய்ந்த கார்களுக்கும் மின்சார கார்களுக்குமான ‘ஏ’ பிரிவில் சிஒஇ கட்டணம் 0.1 விழுக்காடு குறைந்து 93,601 வெள்ளியாகப் பதிவானது.

பெரிய, அதிக சக்திவாய்ந்த கார்கள், மின்சார கார்களுக்கான ‘பி’ பிரிவில் கட்டணம் நான்கு விழுக்காடு குறைந்து 116,625 வெள்ளியாகப் பதிவானது.

பொதுப் பிரிவு வாகனங்களுக்கு ‘இ’ பிரிவில் சிஒஇ கட்டணம் 123,000 வெள்ளியிலிருந்து 115,112 வெள்ளிக்குக் குறைந்தது.

வர்த்தக வாகனங்களுக்கான ‘சி பிரிவில் கட்டணம் 3.6 விழுக்காடு குறைந்து 65,476 வெள்ளியாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்