காம்லிங்க்பிளஸ் (ComLink+) முன்னேற்றத் தொகுப்புத் திட்டம் விளைவித்த பலன்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள நிலவர அறிக்கையில், இத்தகைய சமூகநலன் சார்ந்த உதவிபெற்று வரும் குடும்பங்கள், முன்னேற்றம் அடைந்துள்ளன என்றும் எனினும் வருமானம் சார்ந்த பாதுகாப்பு, பாலர் கல்வி சேர்க்கை, வீட்டுரிமை சார்ந்தவற்றில் இக்குடும்பங்கள் சவால்களை எதிர்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கான ஆதரவு பற்றிய நிலவரம் தொடர்பில் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேற்கூறிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சிறார் மேம்பாடு மற்றும் கல்வி தொடர்பில் காம்லிங்க்பிளஸ் உதவி[Ϟ]பெறும் குடும்பங்களின் சூழலையும் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
அதில் மூன்று வயது முதல் ஆறு வயதுக்கிடையேயான பாலர் வயதுக் குழந்தைகளைக் கொண்ட 85% காம்லிங்க்பிளஸ் குடும்பங்கள், தங்கள் பிள்ளை[Ϟ]களைப் பாலர் பள்ளிகளில் சேர்த்துள்ளன; இருப்பினும், பாலர் கல்வி வழிகாட்டித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள பாலர் பள்ளி[Ϟ]களில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்த குடும்பங்களில் 26% மட்டுமே 2023ல் தங்கள் குழந்தைகளை அப்பாலர் பள்ளிக்குத் தவறாமல் அனுப்பியுள்ளன என்றும் அறிக்கை விளக்கியது.
அறிக்கை குறிப்பிட்ட மற்றோர் அம்சத்தில் வீட்டுவசதி பற்றிய தகவலும் இடம்பெற்றிருந்தது. அதில் மேற்கூறிய காம்லிங்க்பிளஸ் சமூக உதவியால் பயன்பெற்று வரும் குடும்பங்[Ϟ]களில் 79% குடும்பங்கள் மூன்று மாதங்களுக்கும் குறைவான வாடகை நிலுவைத் தொகையைக் கொண்டிருந்தன எனவும், மேலும் 66% குடும்பங்கள் வீட்டு உரிமைக்காகக் கணிசமான சேமிப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் தரவுகள் குறிப்பிட்டன.
பாலர் பள்ளி, வேலைவாய்ப்பு, கடன் தீர்வு மற்றும் வீட்டு உரிமைக்கான காம்லிங்க்பிளஸ் முன்னேற்றத் தொகுப்புத் திட்டம், நிலைத்தன்மை, மேம்பாடு நோக்கிச் செயல்படும் நடவடிக்கை[Ϟ]களில் ஈடுபடும் குடும்பங்களின் முயற்சிகளுக்குத் தொடர்ந்து துணைபுரியும் என்றும் ஆதரவுக்கோரும் அவர்களை மேலும் உயர்வடையச் செய்யும் வகையில் சிறப்பாகச் செயலாக்கம் காணும் என்று அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.