சட்டவிரோதமாக ஊழியர் தங்குவிடுதி நடத்தியதாகக் கட்டுமான நிறுவனம்மீது குற்றச்சாட்டு

சட்டவிரோதமாக ஊழியர் தங்குவிடுதி நடத்தியதாகக் கட்டுமான நிறுவனம்மீது குற்றச்சாட்டு

படம்: ஏஷியா ஒன்

29 Oct 2026 - 4:49 pm

1 mins read

சுங்கை காடுட்டில் இயங்கும் எல்பிடி கன்ஸ்ட்ரக்‌ஷன் எனும் கட்டுமான நிறுவனத்தின்மீதும் அதன் பொது மேலாளர்மீதும் உரிமமின்றி வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியை நடத்திய குற்றச்சாட்டு வியாழக்கிழமை (அக்டோபர் 29) நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ளது.

அந்நிறுவனம் 58A சுங்கை காடுட் முகவரியில் உள்ள அதன் கட்டடத்தின் ஒரு பகுதியை ஊழியர் தங்குமிடமாக மாற்றி, அதில் நான்கு நிறுவனங்களைச் சேர்ந்த 173 ஊழியர்களைத் தங்கவைத்ததாக மனிதவள அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் அதிகாரிகள் இவ்வாண்டு ஜனவரி 6ஆம் தேதி அங்கு சோதனை நடத்தியபோது 300 பேர் படுப்பதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டதைக் கண்டதாக அமைச்சு கூறியது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு வரையில் நிறுவனத்தின் கட்டடத்தின் ஒரு பகுதி வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு மாற்றப்பட்டது என்று அதன் விசாரணைகளில் தெரியவந்துளைளதை அமைச்சு குறிப்பிட்டது.

சட்டத்துக்கு எதிரான அந்த ஏற்பாடு 173 வெளிநாட்டு ஊழியர்களுக்காக உரிமமின்றி மேற்கொள்ளப்பட்டது.

எல்பிடி நிறுவனத்தின் பொது நிர்வாகியான ஆல்வின் லிம் யீ ஹொங், 45, மீது தெரிந்தே வெளிநாட்டு ஊழியர்களுக்கு உரிமமின்றி தங்குவிடுதியை நடத்த நிறுவனத்துக்கு அனுமதியளித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எல்பிடி நிறுவனத்தின்மீது, உரிமமின்றி வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றமிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால் $500,000 அபராதம், சிறை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்பட்டலாம்.

குறிப்புச் சொற்கள்