கிழக்கு ஜோகூர் நீரிணையில் தீப்பிடித்து எரிந்த கப்பலின் 22 ஊழியர்களும் மீட்பு

கிழக்கு ஜோகூர் நீரிணையில் தீப்பிடித்து எரிந்த கப்பலின் 22 ஊழியர்களும் மீட்பு

2 mins read
3b7123e6-9523-4711-993b-9c05e20d4950
தீ ஏற்பட்ட கப்பலில் நீரைப் பாய்ச்சி அடிக்கும் தீயணைப்பு வீரர்கள். - படம்: சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை

கிழக்கு ஜோகூர் நீரிணையில் நின்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றில் திடீரென தீச்சம்பவம் ஏற்பட்டது.

அக்கப்பலில் இருந்த 22 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கடல்துறை துறைமுக ஆணையமும் தெரிவித்தன.

“சம்பவம் நடைபெற்ற கடல்வட்டாரத்தில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏதும் ஏற்படவில்லை,” என்று கடல்துறை துறைமுக ஆணையம் கூறியது.

இருப்பினும், அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு அறிவிப்புக் செய்யப்படுவதாகவும் அது தெரிவித்தது.

நிலைமைய சிங்கப்பூர் உணவு அமைப்பும் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட ஆணையம், அந்த வட்டாரத்தைச் சுற்றி உள்ள மீன் பண்ணைகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறியது.

கூடுதல் விவரங்களைத் திரட்ட, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அணுகி உள்ளது.

முன்னதாக, சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டது.

கப்பலில் ஏற்பட்ட தீகுறித்து திங்கட்கிழமை (அக்டோபர் 21) காலை 10.30 மணி வாக்கில் தங்களுக்கு தகவல் வந்ததாக அது குறிப்பிட்டது.

குடிமை தற்காப்புப் படையின் மூன்று தீயணைப்பு கப்பல்களும் மீட்புப் கப்பலும் சம்பவ இடத்திற்கு விரைந்தது. மேலும் 30 கடல் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிக்கு அனுப்பட்டதாக அது கூறியது.

தீ ஏற்பட்ட கப்பலில் நீரைப் பீய்ச்சி அடித்து கப்பலின் வெளிப்புற வெப்பத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கப்பலில் இருந்து எத்தனை பேர் மீட்கப்பட்டனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

மேலும், எதனால் கப்பலில் தீ ஏற்பட்டது என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்