தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மைண்ட்சேம்ப்ஸ் பாலர் பள்ளி ஊழியருக்குக் காசநோய்

1 mins read
5ebfe4b5-8d4d-444e-9fe9-3c623c078fb3
மேப்பல்பேர் (இடது), மைண்ட்சேம்ப்ஸ் பாலர் பள்ளிக் கிளைகளில் காசநோய்ப் பரிசோதனை நடத்தப்பட்டது. - படங்கள்: கூகல் மேப்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள மைண்ட்சேம்ப்ஸ் பாலர் பள்ளியில் ஊழியர் ஒருவருக்குக் காசநோய்க் கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அப்பள்ளியிலும் தோ பாயோ மேப்பல்பேர் பாலர் பள்ளியிலும் காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து ஊழியருக்குத் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இவ்விரு பாலர் பள்ளிக் கிளைகளிலும் பிள்ளைகள் யாருக்கும் காசநோய்த் தொற்று ஏற்படவில்லை என்று தொற்றுநோய் அமைப்பு புதன்கிழமை (ஆகஸ்ட் 20) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது. இரு பாலர் பள்ளிகளிலும் காசநோய்க் கிருமிப் பரவல் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மைண்ட்சேம்ப்ஸ், மேப்பல்பேர் பாலர் பள்ளிகளில் கற்பித்த ஆசிரியர் ஒருவருக்குக் காசநோய்த் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 13, 15ஆம் தேதிகளில் இரு பள்ளிகளிலும் தொற்றுநோய் அமைப்பு சோதனை நடத்தியது.

காசநோய்த் தொற்றுக்கு ஆளான சம்பந்தப்பட்ட பாலர் பள்ளி ஊழியர், தொற்றுக்கு ஆளான பாலர் பள்ளி ஆசிரியரது வீட்டுடன் தொடர்புடையவர் என்று கடந்த ஜூலை மாதம் 15ஆம் மாதம் தேதி தொற்றுநோய் அமைப்பிடம் தெரியப்படுத்தப்பட்டது.

“அவரிடம் நோய்க்கான அறிகுறி ஏதும் இல்லை. அவர் தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார். அவர் காசநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு வாரங்கள் நீடிக்கும் சிகிச்சைக்குப் பிறகு அவரிடமிருந்து பிறருக்குக் கிருமி தொற்றாது,” என்று தொற்றுநோய் அமைப்பு கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்