முன்னாள் சமய ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

1 mins read
பள்ளிவாசலில் சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது
c190cabe-5b51-4267-9169-f34aacd0d963
படம்: - பிக்சாபே

சிங்கப்பூரில் 2014ஆம் ஆண்டு, பள்ளிவாசலில் ஒரு சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக முன்னாள் சமய ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறார், இளையர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றச்செயல்கள் நடந்தபோது சிறுவனின் வயது 15 என்று தெரிவிக்கப்பட்டது.

அவனது அடையாளத்தைக் காக்கும் பொருட்டு, அவனைப் பற்றியும் அந்த ஆடவர், பள்ளிவாசல் குறித்தும் மேல்விவரங்களை வெளியிட அனுமதி இல்லை.

இரு சம்பவங்களில் ஆடவர் சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

ஆடவர் சிங்கப்பூரில் சமய ஆசிரியர்களுக்கான கட்டாய அங்கீகாரப் பதிவேட்டில் தற்போது இடம்பெறவில்லை என்று ‘முயிஸ்’ எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் ஜூலை 1ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

‘அஸாடிஸா அங்கீகார வாரியம்’ முழுமையான மறுஆய்வு, மதிப்பீட்டிற்குப் பிறகு இவ்வாறு முடிவெடுத்ததாக ‘முயிஸ்’ பேச்சாளர் கூறினார்.

வழக்கு விசாரணை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் முதல்முறை குற்றம் செய்தோருக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 10,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

இரண்டாவது அல்லது அதற்கு அடுத்தமுறை குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் 20,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்