தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிழக்கு தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மேம்பட்ட பயிற்சிக்கூடங்கள்

1 mins read
e61116d5-58ee-49c9-8a02-9f27c83881c3
நேர்த்தியான வடிவம், உயர்தர பயிற்சிப் பிரிவுகள் என புதுப்பிக்கப்பட்ட கூடத்தில் மாணவர்கள் மின்னியல், தானியக்கம் குறித்து புத்தாக்க முறையில் கல்வி கற்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிழக்குப் பகுதியில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக பயிற்சிக் கூடங்கள் அறிவியல் புனைக் கதைகளில் வரும் விண்கலங்களில் இருக்கும் கூடங்கள்போல் காட்சியளிக்கின்றன.

இது ஸ்டார் டிரெக் (Star Trek) என்ற பிரபல அறிவியல் தொடராக ஒளிபரப்பாகும் ‘ஸ்டார்ஷிப் என்டர்பிரைஸ்’ என்ற விண்கலத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான வடிவம், உயர்தர பயிற்சிப் பிரிவுகள் என புதுப்பிக்கப்பட்ட கூடத்தில் மாணவர்கள் மின்னியல், தானியக்கம் (automation) குறித்து புத்தாக்க முறையில் கல்வி கற்கும் முறைக்கு மாறியுள்ளனர்.

இந்தப் பயிற்சிக்கூடம் கல்வி கற்பதை விறுவிறுப்பான அனுபவமாக மாற்றியுள்ளதாகக் கூறுகிறார் ஆஸ்டின் உ என்ற மின்னியல், தகவல் - தொழில்நுட்பப் பிரிவின் மூத்த விரிவுரையாளர். இங்கு பயிலும் மாணவர்கள் தாங்கள் விண்கலத்தில் இருக்கும் உணர்வைப் பெறுகின்றனர் என்கிறார் இவர்.

‘கொனெக்டிவிட்டி சொலுயூஷன்ஸ்’ என்ற இந்தப் பயிற்சிக்கூடத்தை தொழில்துறையில் இருக்கும் நவீன வசதிகளுக்கு எற்ப மாற்ற வேண்டும் என்ற நோக்கில் 2021 ஆம் ஆண்டு இந்த மறுவடிவமைப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்