துவாஸ் தொழிற்பேட்டைக் கட்டடத்தில் தீ

1 mins read
1b05138d-5008-4ade-a5e5-1489c0173142
புகையைச் சுவாசித்த இருவரை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்தனர். மருத்துவமனைக்குச் செல்ல இருவரும் மறுத்துவிட்டனர். - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை/ ஃபேஸ்புக்

துவாஸ் வட்டாரத்தில் உள்ள தொழிற்பேட்டைக் கட்டடத்தில் சனிக்கிழமை (மார்ச் 8) தீ மூண்டது.

30 மீட்டருக்கு 15 மீட்டர் பரப்பளவிலான இடத்தில் வைக்கப்பட்டிருந்த சாயம் தீப்பிடித்துக்கொண்டதாகத் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

10 துவாஸ் அவென்யூ 18Aல் உள்ள அந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் தரைத்தளத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டது.

இரவு 8.30 மணி அளவில் தீயணைப்பாளர்கள் தீயை அணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அடைவதற்கு முன்பு அங்கிருந்து ஆறு பேர் வெளியேறினர்.

புகையைச் சுவாசித்த அவர்களில் இருவரை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்தனர்.

மருத்துவமனைக்குச் செல்ல இருவரும் மறுத்துவிட்டனர்.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்