புக்கிட் மேரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஆறு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள புளோக் 104இல் தீச்சம்பவம் ஏற்பட்டதாக செவ்வாய்க்கிழமை காலை 11.20 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயணைப்புச் சாதனங்கள் மூலம் தீயணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீச்சம்பவம் ஏற்பட்ட வீடு ஒன்பதாம் தளத்தில் இருந்ததாகவும் தீ வீட்டின் படுக்கை அறையில் ஏற்பட்டு மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.
தீயாலும் புகையாலும் வீட்டின் மற்ற பகுதிகளும் சேதமடைந்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீ ஏற்பட்ட வீட்டில் இருந்த இருவர் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னரே அந்த வீட்டில் இருந்து வெளியேறினர்.
புளோக்கின் 9, 10, 11 தளத்தில் இருந்த 35 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தீயால் ஏற்பட்ட புகையைச் சுவாசித்த 6 பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
விசாரணை தொடர்கிறது.

