ஜாலான் காயு குடியிருப்புக் கட்டடத்தில் தீ; மருத்துவமனையில் குடியிருப்பாளர்

1 mins read
7ddeb1a7-db1c-42b4-9b07-fffae32b2ff7
புளோக் 447B ஜாலான் காயுவின் பத்தாவது மாடியில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இங் சீ மெங்/ ஃபேஸ்புக்

ஜாலான் காயு வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் திங்கட்கிழமை (மே 12) தீச்சம்பவம் நிகழ்ந்தது.

கட்டடத்தில் உள்ள மின்கம்பிகள் தீப்பிடித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீச்சம்பவம் காரணமாக குடியிருப்பாளர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் மூச்சுவிட சிரமப்பட்டதாக ஜாலான் காயு நாடாளுமன்ற உறுப்பினர் இங் சீ மெங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை அவர் நேரில் சந்தித்தார்.

கட்டடத்தின் சில வீடுகளில் மின்சாரச் சேவை தடைப்பட்டது.

தீச்சம்பவம் குறித்து காலை 9.30 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

புளோக் 447B ஜாலான் காயுவின் பத்தாவது மாடியில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கட்டடத்தில் மின்தூக்கிச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாகப் பிற்பகல் 12.41 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

குடியிருப்புக் கட்டடத்தில் மின்சாரச் சேவை இரவு 9 மணிக்குள் வழக்கநிலைக்குத் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்