ரெட்ஹில் குடியிருப்பில் தீ; 30 பேர் வெளியேற்றம்

1 mins read
c5eaf2ca-d38e-49dd-8862-8bf4be28ac9c
புளோக் 90 ரெட்ஹில் குளோசில் தீவிபத்து ஏற்பட்டது குறித்து தங்களுக்கு வியாழக்கிழமை இரவு 7.25 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.  - படம்: ஷின் மின் நாளிதழ்

ரெட்ஹில் வட்டாரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் டிசம்பர் 12ஆம் தேதி இரவு தீவிபத்து ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட புளோக்கில் வசித்த கிட்டத்தட்ட 30 பேரை காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் வெளியேற்றினர்.

புளோக் 90 ரெட்ஹில் குளோசில் தீவிபத்து ஏற்பட்டது குறித்து தங்களுக்கு வியாழக்கிழமை இரவு 7.25 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டின் வரவேற்பறையில் தீ மூண்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் குழாய்களின் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. தீவிபத்தின் காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்