தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பர் 4ஆம் தேதிமுதல் தீமிதித் திருவிழா நேர்த்திக்கடன் முன்பதிவு

1 mins read
8afb3d35-43e5-4655-9e06-3ed45ce4fa66
இவ்வாண்டு அக்டோபர் 12ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தீமிதித் திருவிழா நடைபெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் தீமிதித் திருவிழாவைக் கொண்டாட ஆயத்தமாகிறது.

இவ்வாண்டு அக்டோபர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீமிதித் திருவிழா நடைபெறும்.

அந்த மூன்று மாதத் திருவிழா,  ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பால்குடம், அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம், பூக்குழி இறங்குதல், பூக்குழியை வலம் வருதல் ஆகிய வழிபாடுகளுக்கு இணையம்வழி பதிவுசெய்வது கட்டாயம் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 4ஆம் தேதி முதல் பக்தர்கள் இணையம்வழி நேர்த்திக்கடன்களுக்குப் பதிவு செய்யத் தொடங்கலாம். பதிவுசெய்ய இறுதி நாள் அக்டோபர் 11ஆம் தேதி, சனிக்கிழமை.

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அனைத்து நாள்களிலும் நேரடியாகச் சென்று நேர்த்திக்கடன் சீட்டுகளை வாங்க முடியாது.

பால்குடம், அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம் ஆகிய வழிபாடுகளை இம்மாதம் 27ஆம் தேதி, சனிக்கிழமை முதல் பக்தர்கள் ஆலயத்தில் நிறைவேற்றத் தொடங்கலாம்.

தீமிதித் திருவிழா நாளன்று, அதாவது அக்டோபர் 12ஆம் தேதி, சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் வரை பக்தர்கள் பாத ஊர்வலம் வருவார்கள்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் யூடியூப் தளத்திலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் தீமிதித் திருவிழா நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மேல் விவரங்களுக்கு https://heb.org.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்