23 கல் (Gul) டிரைவில் உள்ள சரக்குக் கிடங்கு புதன்கிழமை (ஏப்ரல் 16) காலை தீப்பிடித்து எரிந்தது.
தீச்சம்பவம் குறித்து காலை 6.15 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீயணைப்பாளர்கள் ஒரு மணி நேரத்தில் தீயை அணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தீ மீண்டும் பற்றிக்கொள்ளாமல் இருக்க பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
சரக்குக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கழிவுப் பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததாக அறியப்படுகிறது.
இதுவரை வெளியான தகவல்களின்படி யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.
அதே முகவரியில் முன்பு இருந்த சரக்குக் கிடங்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.