அதிகாலையிலிருந்து தொடர்ந்து பெய்த மழையால் இன்று காலை ஜூரோங் டவுன் ஹால் சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 11க்கு முன்பு தீவு விரைச் சாலையை நோக்கிச் செல்லும் ஜூரோங் டவுன் ஹால் சாலையில் வெள்ளம் ஏற்பட்டதால் அந்தச் சாலையை காலை 9.00 மணி வரை அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தவிர்க்குமாறு பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) தெரிவித்தது.
யார்வுட் அவென்யூவிலிருந்து பின்ஞாய் பார்க் வரையிலான டன்இயர்ன் சாலையிலும் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் கழகம் எச்சரித்தது.
இன்று காலை 8.10 மணியளவில் ஜூரோங் டவுன் ஹால் சாலையில் வெள்ளம் வடிந்துவிட்டதாக அது கூறியது.
முன்னதாக இன்று காலை 6.40 மணியளவில் தீவைச் சுற்றி பல பகுதிகளில் 6.50 மணியிலிருந்து காலை 8.00 மணி வரை கனத்த மழை பெய்யலாம் என கழகம் கூறியிருந்தது.