சிங்கப்பூரில் புதன்கிழமை (பிப்ரவரி 18) பெய்த கடும் மழையின்போது ஜூரோங் டவுன் ஹால் ரோட்டில் ஏற்பட்ட வெள்ளம் தணிந்துள்ளது.
தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி, மாலை மணி 5.50க்கு எக்ஸ் தளத்தில் மழை குறித்துப் பதிவிட்டிருந்தது. ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 11லிருந்து ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 12வரை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைத் தவிர்க்குமாறு அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருந்தது.
அதற்கு முன்னர் மாலை 5.30 மணியளவில் திடீர் வெள்ளம் காரணமாக ஜாலான் பூன் லே (என்ட்டர்பிரைஸ் ரோட்டிலிருந்து இன்ட்டர்நேஷனல் ரோடுவரை), சன்செட் டிரைவ்-சன்செட் வே ரோடு சந்திப்பு ஆகியவற்றைத் தவிர்க்குமாறும் பியுபி ஆலோசனை கூறியிருந்தது.
பின்னர் மாலை மணி 6.04க்கு வெளியிட்ட பதிவில் திடீர் வெள்ளம் தணிந்துவிட்டதாக அது குறிப்பிட்டது.

