தீவின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் திடீர் வெள்ள எச்சரிக்கை

தீவின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் திடீர் வெள்ள எச்சரிக்கை

2 mins read
காலை 8.25 மணிமுதல் 9.45 மணி வரையில் தீவின் பல பகுதிகளில் கனமழை
b450d9b0-dd6a-45d3-a7c6-d0f85422d3aa
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) காலை 8.25 மணிமுதல் 9.45 மணி வரையில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்திருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால் சிங்கப்பூரின் மத்திய, கிழக்கு வட்டாரங்களில் உள்ள பல இடங்களைத் தவிர்க்கும்படிப் பொதுமக்களைப் பொதுப் பயனீட்டுக் கழகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கேட்டுக்கொண்டது.

அதற்கு முன்னதாக, காலை 8.25 மணிமுதல் 9.45 மணி வரையில் கனமழை தீவின் பல பகுதிகளில் பெய்யும் எனவும் அது கூறியிருந்தது.

கழகம் அதன் எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் லிம் டெக் பூ ரோடு அருகில் உள்ள அப்பர் பாய லேபார் ரோட்டின் துணைச் சாலையை காலை 8.18 மணிமுதல் ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குமேல் திடீர் வெள்ள அபாயத்தால் தவிர்க்கும்படி பதிவிட்டது.

பிறகு காலை 8.28 மணிக்கு செய்த மறுபதிவில் லோரோங் காம்பிர், லோரோங் பென்சாலாக் முதல் காம்பிர் வாக் ஆகிய அப்பர் சிராங்கூன் ரோட்டின் அருகில் உள்ள பகுதிகளை தவிர்க்கும்படி வாகன ஓட்டுநர்களைக் கழகம் கேட்டுக்கொண்டது.

பொத்தேங் பாசிர் பகுதியில் சியாக் கியு அவென்யூ அருகில் உள்ள புவே ஹீ அவென்யூவை ஒரு மணி நேரத்துக்குத் தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அது அறிவுரை வழங்கியது. அதேபோல ஃபேரர்பார்க் வட்டாரத்தில் கேம்பிரிட்ஜ் ரோட்டின் அருகில் உள்ள கார்லைய்ல் ரோட்டையும் 8.32 மணிமுதல் ஒரு மணி நேரம் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் 8.58 மணிக்கான பதிவில் சிம்ஸ் அவென்யூ அருகே கேலாங் லோரோங் 35 முதல் லோரோங் 39 வரையிலான பகுதியை ஒரு மணி நேரம் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கழகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
வெள்ளம்திடீர் வெள்ளம்எச்சரிக்கைவானிலைபோக்குவரத்துபொதுமக்கள்பாதுகாப்பு