சக ஊழியர் குழந்தையைத் துன்புறுத்தவிட்ட முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியர்

1 mins read
114ad97d-fc18-4a9a-a8d9-b5fe41a5b5b5
கோப்புப் படம்: - சாவ்பாவ்

வேலை நேரத்தில் தனது சக ஊழியர்கள் ஒரு வயது குழந்தையை மேசைக்கும் சுவருக்கும் இடையே சிக்கவைத்துத் துன்புறுத்தியதை மழலையர் பள்ளி ஆசிரியர் ஒருவர் கண்டிருக்கிறார்.

சீனாவைச் சேர்ந்த அந்த 29 வயது ஆசிரியர், பாதிக்கப்பட்ட குழந்தை மேசைக்குக்குக்கீழ் தவித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். பின்னர் அவர் தனது 30 வயது சக ஊழியருக்குத் தெரியப்படுத்தினார். இருவரும் அந்தக் காலகட்டத்தில் முழலையர் பள்ளி ஆசிரியர்களாக இருந்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தை எழுந்து நின்றபோது வயதில் மூத்த ஆசிரியர், மேசையை நகற்றியிருக்கிறார்; மேசை, குழந்தையின் வயிற்றுப் பகுதி மீது மோதியது என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை அழத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வயதில் மூத்த ஆசிரியர் பிளாஸ்டிக் பொருள் ஒன்றைப் பயன்படுத்தி குழந்தையின் தலையை அடித்ததாகவும் துணை அரசாங்க வழக்கறிஞர் ஏரியல் டான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் அவ்வாறு செய்தபோது வயதில் இளைய ஆசிரியர் அவரைத் தடுக்கவில்லை என்றும் இணை அரசாங்க வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து வயதில் இளைய ஆசிரியர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். பின்னர் செயல்பாட்டுப் பொறுப்புக்கு மாற்றப்பட்ட அப்பெண், குழந்தையைத் துன்புறுத்தியதாகவும் குழந்தையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காததையும் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த வயதில் மூத்த ஆசிரியராக இருந்த மற்றொரு பெண், வரும் மே மாதம் குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டோரின் பெயர்களை வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்