துன்புறுத்தல், குறும்புச் செயல் உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்துள்ள 53 வயது லிம் சோக் லே, மீது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொங்கோல் வட்டாரத்திலுள்ள எட்ஜ்ஃபீல்டு பிளெயின்சில் ஜூலை 18ஆம் தேதி காலை 8.30 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் கூச்சல் போட்டதாகவும் சைகை செய்ததாகவும் லிம் மீது ஜூலை 19ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
ஜூலை 18ஆம் தேதி அங்கு அதே போன்ற குற்றத்தைப் புரிந்ததாக 28 வயது ஜோலீன் சியாங் வான் லிங் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு பெண்மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இருவருக்கும் உள்ள தொடர்பு குறி்த்து நீதிமன்றப் பதிவுகள் தெரிவிக்கவில்லை.
2020ல் கோவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், செவிலியராக இருந்த தனது அண்டை வீட்டுக்காரரை துன்புறுத்தியதற்காக லிம், முன்னர் செய்திகளில் அடிபட்டார்.
2023ல் தனது மகனின் சிங்க நடனப் போட்டியில் தொந்தரவு விளைவித்ததற்காக லிம்முக்கு கடந்த பிப்ரவரி மாதம் $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

