வசதி குறைந்த 2,400 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தகுந்த கவனிப்பிற்கும் கல்விக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் நிதி திரட்டி வருகிறது.
குழந்தைகளுக்கான பால் மாவு, வடகிழக்கு வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான பள்ளிப் போக்குவரத்துத் தொகைக்கான ஆதரவு, துயர்துடைப்பு ஆகியவற்றுக்காக ‘ஸ்டெப் அப் ஃபார் பிரைட்டர் ஸ்மைல்’ எனும் பெயரில் இந்நிதி திரட்டு நடைபெறுகிறது.
ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதிவரை இணையவழி திரட்டப்படும் நிதி, வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம், ‘ஸ்டார்ஸ்’ எனும் பள்ளிப் போக்குவரத்து உதவி, துயர்துடைப்புத் திட்டம் ஆகியவற்றைச் சென்றடையும்.
குறைந்த வருமானமுள்ள சூழலில் குழந்தைகளின் நல்வாழ்வை முன்னிறுத்தி வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் ஆறு வயதுவரையுள்ள குழந்தைகளுக்கான பால் மாவு, அணையாடை (diaper) உள்ளிட்ட தேவையான பொருள்கள் வாங்க குடும்பங்களுக்கு ஆதரவளிக்கிறது.
‘ஸ்டார்ஸ்’ திட்டம், போக்குவரத்துச் செலவுகள் ஏற்படுத்தும் சுமையைக் குறைத்து, மாணவர்கள் சிறப்பாகச் செயலாற்றவும், கல்வியில் தங்கள் இலக்கை எட்டவும் ஆதரவளிக்கும் நோக்கில் செயல்படுகிறது.
மேல்விவரங்களுக்கு https://northeast.cdc.gov.sg/ இணையத்தளத்தை நாடலாம்.

