ஃபேர்பிரைசில் ஆகஸ்ட் 6 முதல் 16 வரை $61 செலவழிப்போர்க்கு $6 பற்றுச்சீட்டு

ஃபேர்பிரைசில் ஆகஸ்ட் 6 முதல் 16 வரை $61 செலவழிப்போர்க்கு $6 பற்றுச்சீட்டு

1 mins read
03b5e6ac-5796-436e-be51-d84ac5c8d355
ஃபேர்பிரைஸ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, யுனிட்டி கடைகளுக்கு இச்சலுகை பொருந்தும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) முதல் ஆகஸ்ட் 16 வரை அனைத்து ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிலும் வாடிக்கையாளர்கள் ஒரே பரிவர்த்தனையில் செலவழிக்கும் ஒவ்வொரு $61க்கும் $6 திரும்பப் பெறும் பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளது. ஃபேர்பிரைஸ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, யுனிட்டி கடைகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமை அறிவித்தது.

ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் மூன்று பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். அவற்றை ஆகஸ்ட் 31க்குள் பயன்படுத்த வேண்டும். மேலும், அவற்றை சிடிசி பற்றுச்சீட்டுகள், சாஸ் அட்டைத் தள்ளுபடிகள், மூத்த குடிமக்களுக்கான தள்ளுபடிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். விடுமுறைக் காலத்தில் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். முன்னதாக, ஏப்ரலில் 100 அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தை நிறுத்தி வைத்த ஃபேர்பிரைஸ், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை அரிசி, சமையல் எண்ணெய், முட்டை, காய்கறிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருள்களின் விலையை உயர்த்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்