தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிரணு, திசு, மரபணு சிகிச்சைக்கு அரசாங்க நிதியுதவியைப் பயன்படுத்தலாம்

2 mins read
c407a3ee-3fdb-48bd-9b8c-2333b065faeb
கோப்புப் படம்: - சாவ்பாவ்

குறிப்பிட்ட உயிரணு (cell), திசு, மரபணு சார்ந்த சிகிச்சை தேவைப்படுவோர் இனி அரசாங்க நிதியுதவியைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தப் புற்றுநோய்க்கான ஒரு சிகிச்சையில் தொடங்கி இது நடப்புக்கு வருகிறது.

இதன் மூலம் சிகிச்சை முறைகள் அடுத்த அத்தியாயத்திற்குச் செல்வதாக நம்பப்படுகிறது. பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்க உயிரணுக்களை மருந்துகளாகப் பயன்படுத்தவும் இது வழிவகுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சலுகை முறை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தகைய சிகிச்சை முறைகள் எவ்வளவு தூரம் வழங்கப்படுகின்றன என்பது ஒவ்வொரு சுகாதார நிலையத்துக்கும் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனிதர்கள் அல்லது விலங்குகளின் உயிரணுக்கள், திசுக்களிலிருந்து உருவாகும் சிகிச்சை முறைகளைக் கொண்டு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைக் கவனிக்கலாம். அத்தகைய பல சிகிச்சை முறைகளுக்கு அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) அண்மைய ஆண்டுகளில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

எடுத்துக்காட்டாக, கார் டி-செல் சிகிச்சை, புற்றுநோய் இருப்போர் கீமோதெரப்பி இல்லாமல் கூடுதல் வேகமாக குணமடைய வகைசெய்கிறது.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100 நோயாளிகளுக்கு உயிரணு அல்லது மரபணு சார்ந்த சிகிச்சை தேவைப்படுகிறது. பொதுவாக வழக்கமாக வழங்கப்படும் சிகிச்சை பலனளிக்காதோருக்கு அத்தகைய சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டும்.

சிங்கப்பூரர்கள், தாங்கள் பெறும் சிகிச்சைக்கு ஆகும் கட்டணத்தில் தற்போது 75 விழுக்காடு வரை அரசாங்க நிதியுதவி பெறுகின்றனர். அதிகபட்சமாக 150,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்படும்.

சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு அந்த விகிதம் 22.5 விழுக்காடாக இருக்கிறது. அவர்களுக்கு அதிகபட்சமாக 45,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்