நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, நவம்பர் 15 முதல் 21ஆம் தேதி வரை துருக்கியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாடான ‘கோப்31’ (COP31) மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அங்கு அவர், கரிமச் சந்தைகள், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளுதல் போன்ற தலைப்புகள் குறித்து மற்ற நாட்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவார்.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலகம் கூட்டாக எவ்வாறு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சுமார் 200 நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகள் கோப்31 மாநாட்டில் ஒன்றுகூடுகின்றனர். இந்த மாநாடு நவம்பர் 9 முதல் 20ஆம் தேதி வரை அன்டால்யா நகரில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான மாநாடு, போர்கள், விண்ணைத் தொடும் எரிசக்திச் செலவுகள், வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற சவாலான சூழலில் நடைபெறுகிறது. அதே வேளையில், பல்வேறு நாடுகள் பருவநிலை தொடர்பான பேரிடர்களாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
கோப்31 மாநாட்டில், திருவாட்டி ஃபூ சிங்கப்பூரின் தேசிய அறிக்கையை வழங்குவார். மேலும் 2030ஆம் ஆண்டுக்கு முன்னர் கரிம வெளிப்பாடு குறைப்புகளை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளைப் பற்றி விவாதிப்பதை நோக்கமாகக் கொண்ட அமைச்சர்கள் வட்டமேசை மாநாடுகளில் பங்கேற்பார்.
மேலும், அவர் கரிமச் சந்தைகளை மேம்படுத்துவது குறித்த ஓர் உயர்மட்டக் கலந்துரையாடலில் பங்கேற்பார். அத்துடன், பங்கேற்கும் நாடுகளை ஒன்றிணைத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், உயர் நம்பகத்தன்மை கொண்ட கரிம ஊக்கப் புள்ளிகள் வழங்குவதை விரைவுபடுத்துவார்.
தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலைகளை விட புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகின் பருவநிலை ஒப்பந்தமான பாரிஸ் ஒப்பந்தத்தின் 6வது பிரிவின் கீழ், கரிம ஊக்கப் புள்ளிகளின் உலகளாவிய வர்த்தகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பருவநிலை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் கரிமச் சந்தைகள் மிக முக்கியமானவை. ஏனெனில், அவை நாடுகள் தங்களின் பருவநிலை இலக்குகளை அடைய ஒத்துழைக்க வழிவகுக்கின்றன.
கோப்31 மாநாட்டில், இந்தக் கூட்டணியின் இணைத் தலைவரான திருவாட்டி ஃபூ, தமது சக தலைவர்களுடன் இணைந்து, கூட்டணியின் அடுத்த கட்ட பணிகளுக்கான முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கும் வட்டமேசை கலந்துரையாடலில் பங்கேற்பார்.
மேலும், குளிரூட்டி மூலம் ஏற்படும் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வழிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய குளிர்விப்பு உறுதிமொழியை வலுப்படுத்தும் வகையில், வெப்பத்தை எதிர்கொள்ளும் திறன், நிலையான குளிர்விப்பு தொடர்பான நிகழ்வுகளிலும் அமைச்சர் கலந்துகொள்வார்.
