4,126 பிடிஓ வீடுகள் விற்பனை

ஏழு வீட்டுத் திட்டங்களில் புதிய வீவக வீடுகள்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பிப்ரவரி 21ஆம் தேதி பிடோக், குவீன்ஸ்டவுன், சுவா சூ காங், ஹவ்காங், பொங்கோல், உட்லண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழு வீட்டுத் திட்டங்களின்கீழ் 4,126 தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளை விற்பனைக்கு விட்டது.

ஐந்து திட்டங்கள், அல்லது விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவற்றுக்கான காத்திருப்பு காலம் மூன்றரை ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்கும் என்று கழகம் தெரிவித்தது.

இந்த விற்பனைத் திட்டத்திலிருந்து வீடு ஒன்றுக்கு விண்ணப்பிக்க, முன்னதாக இருந்த ஏழு நாள்களைக் காட்டிலும் விண்ணப்பதாரர்களுக்கு இம்முறை எட்டு நாள்கள் வழங்கப்படும். தீர ஆராய்ந்து முடிவெடுக்க அவர்களுக்குக் கூடுதல் நேரம் கொடுப்பதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது.

முதிர்ச்சியடைந்த பேட்டையான குவீன்ஸ்டவுனில் உள்ள ‘தங்ளின் ஹால்ட் கோர்ட்யார்ட்’ ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம், முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தின்கீழ் (பிஎல்எச்) இடம்பெறுகிறது. இந்தத் திட்டத்தில் மேலும் கடுமையான நிபந்தனைகள் உள்ளன.

முதன்மை வட்டார வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை விற்கும்போது வீட்டின் மதிப்பீடு அல்லது மறுவிற்பனை விலை ஆகியவற்றில் எது அதிகமோ அதில் எட்டு விழுக்காட்டைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்துக்கான குறைந்தபட்ச தங்கும் காலம் பத்து ஆண்டுகளாக இருக்கும். சந்தைக் கழிவுகளைத் தவிர, ‘பிஎல்எச்’ வீடுகளுக்குக் கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன.

‘பிஎல்எச்’ வீடுகளில் இருபது விழுக்காடு, முதல் முறை வீடு வாங்கும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுவதாக கழகம் கூறியது. அவற்றில் 2 விழுக்காடு, திருமணமான பிள்ளைகள் முன்னுரிமைத் திட்டத்தின்கீழ், இரண்டாம் முறை வீடு வாங்கும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

திருமணமான பிள்ளைகள் முன்னுரிமைத் திட்டத்தில், திருமணமான பிள்ளை தன்னுடைய பெற்றோருடனோ அவர்களுக்கு அருகிலோ வசிக்கமுடியும்.

‘தங்ளின் ஹால்ட் கோர்ட்யார்ட்’ வீட்டுத் திட்டத்தில், 251 நீக்குப்போக்கான ஈரறை வீடுகளும் நாலறை வீடுகளும் வழங்கப்படுகின்றன. அவை, முன்னாள் தங்ளின் ஹால்ட் அக்கம்பக்க நிலையம் அமைந்திருந்த இடத்தில் கட்டப்படும்.

அந்த 48 மாடி வீட்டுத் திட்டம், காமன்வெல்த் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடை தொலைவில் உள்ளது.

மானியங்களைத் தவிர்த்து, அங்குள்ள நீக்குப்போக்கான ஈரறை வீட்டு விலை $235,000 முதல் $353,000 வரையிலும், நாலறை வீட்டு விலை $565,000 முதல் $720,000 வரையிலும் உள்ளன.

இதற்கிடையே, பிடோக்கில் உள்ள ‘பிடோக் சவுத் புளூம்’, ‘பிடோக் நார்த் ஸ்பிரிங்ஸ்’ ஆகிய இரண்டு வீட்டுத் திட்டங்களில் 961 வீடுகள் விற்பனைக்கு விடப்படவுள்ளன. அவற்றுக்கான காத்திருப்பு நேரங்கள் மூவாண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும்.

பொங்கோலில் உள்ள ‘மடில்டா ரிவர்சைட்’ திட்டத்திற்கு ஆகக் குறைவான காத்திருப்பு நேரம். அந்தத் திட்டத்தில் உள்ள வீடுகளுக்கு மூவாண்டுகள் ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்.

இதற்கிடையே உட்லண்ட்ஸில் உள்ள ‘உட்குரோவ் எட்ஜ்’ வீட்டுத் திட்டத்தில் 1,127 வீடுகள் அமைந்திருக்கும். சுவா சூ காங்கில் உள்ள ‘ரேல் கார்டன்’ வீட்டுத் திட்டத்தில் 465 நீக்குப்போக்கான ஈரறை வீடுகள், மூவறை, நாலறை வீடுகள் வழங்கப்படும்.

மற்றொரு வீட்டுத் திட்டம், ஹவ்காங்கின் ‘தஞ்சோங் டிரீ ரெசிடென்சஸ்’. அதில் 360 நீக்குப்போக்கான ஈரறை வீடுகள், மூவறை, நாலறை வீடுகள் விற்பனைக்கு விடப்படும். இவ்வாண்டின் மூன்று பிடிஓ வீட்டு விற்பனைகளில் பிப்ரவரி மாத விற்பனைத் திட்டம் முதலாவதாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!