தெம்பனீஸ் ஸ்திரீட் 94 உள்ள பலபயன்பாட்டு இடம் விற்பனைக்கு

தெம்பனீஸ் ஸ்திரீட் 94 உள்ள பலபயன்பாட்டு இடம் விற்பனைக்கு

1 mins read
346ebc1b-6c12-4552-b767-c22854f3aef8
99 ஆண்டு குத்தகை கொண்ட அந்த இடத்தில் கிட்டத்தட்ட 585 வீடுகள் கட்டமுடியும். - படம்: நகர சீரமைப்பு ஆணையம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வியாழக்கிழமை (ஜூன் 27) அன்று தெம்பனீஸ் ஸ்திரீட் 94 உள்ள பலபயன்பாட்டு இடம் ஒன்றை விற்பனைக்கு உள்ளது என்று அறிவித்துள்ளது.

99 ஆண்டு குத்தகை கொண்ட அந்த இடத்தில் கிட்டத்தட்ட 585 வீடுகள் கட்டமுடியும்.

இவ்வாண்டுக்கான அரசாங்க நில விற்பனை திட்டத்தின் கீழ் அந்த இடம் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த இடம் 23,512 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. தெம்பனீஸ் ஸ்திரீட் 94ல் உள்ள இடத்திற்கான விற்பனை குத்தகை செப்டம்பர் 19ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்