தேசியத் தண்ணீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபு) ஈஷூன் அவென்யூ 7 உள்ளிட்ட தீவின் பல இடங்களில் (ஏப்ரல் 13) திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
புவாங்கோக் ஈஸ்ட் டிரைவ்வை நோக்கிச் செல்லும் காலாங்-பாயா லேபார் விரைவுச் சாலை, தெம்பனீஸ் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் பொங்கோல் வே ஆகிய பகுதிகளிலும் கனத்த மழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளைப் பொதுமக்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்திய பியுபி, அதிகாரிகளை உதவிக்காக அங்கு அனுப்பியுள்ளதையும் குறிப்பிட்டது.
பிற்பகல் 2.30 மணியளவில் யூஷூன் அவென்யூ 7இல் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வடிந்துவிட்டதாக பியுபி அதன் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது.
பிற்பகல் 2.50 மணியளவில் பொங்கோல் வேயிலும் வெள்ளம் வற்றியதாக அது குறிப்பிட்டது.
ஈஷூன் அவென்யூ 2, ஈஷூன் அவென்யு 5, ஜாலான் பொக்கொக் செருனாய், புக்கிட் தீமா சாலை, ஜாலான் லொக்கொம், ஆகிய பல இடங்களில் பிற்பகல் 3 மணிவரை கனத்த மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் இதற்குமுன் முன்னுரைத்தது.
ஏப்ரல் மாதத்தின் பெரும்பாலான நாள்களில் தீவெங்கும் மிதமான மழையும் இடியுடன் கூடிய கனத்த மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாத முற்பாதியில் பதிவாகும் ஒட்டுமொத்த மழையின் அளவு சரசாரியாகப் பதிவாகும் மழையைவிட அதிகமாகயிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வெப்பநிலை 33லிருந்து 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சில நாள்களில் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும்.