தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெருமழையால் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என முன்னுரைப்பு

1 mins read
8bd67e6a-c1f2-4658-bde7-02de79dc9cd9
சனிக்கிழமை (பிப்ரவரி 15) பிற்பகல் 3.45 மணியிலிருந்து 5 மணிவரை தீவின் வடக்கு, மேற்கு, மத்தியப் பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் பெருமழை பெய்யலாம் என்றும் அதனால் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பொதுப் பயனீட்டுக் கழகம் சனிக்கிழமை (பிப்ரவரி 15) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தோ பாயோ லோரோங் 1 - தோ பாயோ லோரோங் 2 சந்திப்பு, லோரோங் காம்பீர், சியாக் கியூ அவென்யூ அருகிலுள்ள பார்க் ஹீ அவென்யூ, சியாங் குவாங் அவென்யூ, லிம் டெக் பூ சாலையிலிருந்து ரோச்டேல் சாலை வரையிலான அப்பர் பாய லேபார் சர்வீஸ் சாலை, அப்பர் பாய லேபார் சாலை அருகிலுள்ள ஜாலான் லோக்கம், ஜாலான் உசாஹா அருகிலுள்ள திரிஃப்ட் டிரைவ், வான் தோ அவென்யூ (பெங் கெக் அவென்யூ) ஆகிய இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளது.

அதனால், அப்பகுதிகளைத் தவிர்க்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

முன்னதாக, சனிக்கிழமை பிற்பகல் 3.45 மணியிலிருந்து 5 மணிவரை தீவின் வடக்கு, மேற்கு, மத்தியப் பகுதிகளில் பெருமழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பதாகக் கழகம் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்