சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றை வெளிநாட்டு ஊழியர்கள் தெரியப்படுத்த உதவ மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
ஒரு செயலியின் மூலமாகவும் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தொண்டூழியர்த் திட்டத்தின் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஃபிரண்ட்ஸ் ஆஃப் ஏஸ் (ஃபேஸ்) எனப்படும் தொண்டூழியர்த் திட்டத்தின்கீழ் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுவதாக மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினைகள் போன்றவற்றை சக ஊழியர்கள், அவர்கள் மூலம் மேலும் எளிதில் தெரியப்படுத்த வகைசெய்வது நோக்கமாகும்.
மனிதவள அமைச்சின் எஃப்டபிள்யுஎம்ஓஎம்கேர் (FWMOMCare) செயலி போன்றவற்றின் முலம் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கைகொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரு தினேஷ் தெரிவித்தார்.


