ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் தீ: 20 பேர் வெளியேற்றம்

1 mins read
d9e53f06-5433-47a0-98b2-e8823c07e466
புகையைச் சுவாசித்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். - படம்: சாவ்பாவ்

ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தீ மூண்டது.

இதையடுத்து, அங்கிருந்து 20 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இரவு 11.55 மணி அளவில் 178 நீல் சாலையில் உள்ள அந்தக் கட்டடத்தில் தீச்சம்பவம் நிகழ்ந்தது.

கட்டடத்தில் உள்ள மின்சார விநியோக அறையில் இருந்த மின்னூட்டுச் சட்டம் தீப்பிடித்துக்கொண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

புகையைச் சுவாசித்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்