இவ்வாண்டு ஜூன் மாதம் முற்பாதியில் பொதுவாக இரவு வேளைகளில் வெப்பமாக இருக்கும். சில நாள்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் திங்கட்கிழமை (ஜூன் 2) தெரிவித்தது.
ஜூன் முற்பாதியில் பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று வானிலை ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது. சில நாள்களில் அதிபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாக இருக்கலாம் என்றும் அது தெரிவித்தது.
பல நாள்களில் இரவில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியசைத் தாண்டும் என்றும் ஆய்வகம் கூறியது.
சில நாள்கள் தீவின் சில பகுதிகளில் காலை வேளையிலும் பிற்பகலிலும் சிறிது நேரம் இடியுடன் கூடிய மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் மேலாக, சுமத்ரா புயல்களால் சில நாள்களில் அதிகாலையில் பரவலான இடியுடன் கூடிய, பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்தது.
மே 2025ன் இரண்டாம் பாதியில், தீவு முழுவதும் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பல நாள்களில் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவாகியது.
2025 மே 24 அன்று பாய லேபாரில் அதிகபட்ச அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியசாகப் பதிவாகியது.