தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்ணில் செலுத்தப்படுகிறது சிங்கப்பூர் செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்

1 mins read
600ccc9a-04fa-48e4-9748-3b3ed5b1a69f
கோப்புப்படம்: டுவிட்டர்/இஸ்ரோ -

சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 செயற்கைக்கோள் எதிர்வரும் 22ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

இது புவி கண்காணிப்புக்காக ஏவப்படும் செயற்கைக்கோள் ஆகும். மேலும், பேரிடர் கண்காணிப்பு உட்பட மேலும் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

பிஎஸ்எல்வி சி-55 என்ற ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.

இதற்காக இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் சம்பந்தப்பட்ட தரப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்றும் சிங்கப்பூர் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என்றும் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக வும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ஏற்கெனவே டெலியோஸ்-1 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.

குறிப்புச் சொற்கள்