தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் தொடர்ந்து வளர்ப்பது முக்கியம்: பிரதமர் வோங்

3 mins read
ee44e752-7c5e-42c9-824d-05c0f116cf20
ஜூன் 23ஆம் தேதி, பெய்ஜிங்கில் உள்ள ஹெபே அரங்கில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வின்போது சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (இடது) சீனப் பிரதமர் லி சியாங் கலந்துரையாடுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பெய்ஜிங்: சிங்கப்பூர் பிரதமர் என்ற முறையில் சீனாவிற்கு தமது முதலாவது அதிகாரத்துவப் பயணத்தின்போது ​​திரு லாரன்ஸ் வோங், இரு நாட்டுத் தலைவர்களிடையே நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் தொடர்ந்து வளர்ப்பது முக்கியம் என்று தாம் நம்புவதாகவும் இது இருதரப்பு உறவின் அடித்தளமாகும் என்றும் சீனப் பிரதமர் லி சியாங்கிடம் தெரிவித்தார்.

ஜூன் 23ஆம் தேதி பெய்ஜிங்கில் சீனப் பிரதமர் லி சியாங்குடனான சந்திப்பில், சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வலுவடைந்து, வளர்ந்து வருகிறது. ஏனெனில், அது பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் ஆழமான நிலையில் கட்டமைக்கப்பட்ட பங்காளித்துவமாகும் என்று திரு வோங் கூறினார்.

“இந்த ஆழமான நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது ஆண்டுதோறும், தலைமுறை தலைமுறையாக வளர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“உங்களுடன் கொண்டிருக்கும் இந்த நல்லுறவும் நம்பிக்கையும் தொடர்வதை விரும்புகிறேன். இதன் மூலம் நாம் நமது உறவைத் தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் சென்று இன்னும் நெருக்கமான உறவுகளை உருவாக்க முடியும்,” என்று நம்புகிறேன் என்று திரு வோங், சீனப் பிரதமரிடம் தெரிவித்தார்.

மே மாதப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ஆசியான் நாடுகளுக்கு அடுத்து சீனாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் திரு வோங்கை, சீனப் பிரதமர் வாழ்த்தினார்.

“இது புதிய சிங்கப்பூர் அரசாங்கம் சீனா-சிங்கப்பூர் உறவில் வைக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது” என்று திரு லி கூறினார்.

தமது அரசாங்கத்தின் சில புதிய உறுப்பினர்களை சீனாவிற்கு அழைத்து வந்திருப்பதாகத் தெரிவித்த பிரதமர் வோங், “நம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளைத் தொடர்ந்து கட்டியெழுப்பவும் வலுப்படுத்தவும், எனது அமைச்சரவையில் உள்ள அனைவரும் தொடர்ந்து சீனாவிற்கு வருகை தருமாறு நான் ஊக்குவிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

திரு வோங்குடன் சீனாவுக்குச் சென்றுள்ள புதிய பேராளர்களில், மே 2025 தேர்தலின்போது அரசியலில் நுழைந்த தற்காலிக போக்குவரத்து அமைச்சரும் நிதிக்கான மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சையது ஹருண் அல்ஹப்ஷி ஆகியோர் அடங்குவர்.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, வெளியுறவு, உள்துறை ஆகியவற்றின் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் ஆகியோர் பேராளர் குழுவில் இடம்பெற்றுள்ள மற்றவர்கள்.

கொந்தளிப்பான உலகளாவிய சூழ்நிலையும், கொந்தளிப்புக்கு மத்தியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் தங்கள் உரையில் வலியுறுத்தினர்.

உலகம், மாற்றம், குழப்பம் நிறைந்துள்ள ஒன்றாகவும் அதில், நிச்சயமற்ற தன்மையும் உறுதியற்ற தன்மையும் அதிகரித்து வருவதாகவும் திரு லி சுட்டிக்காட்டினார்.

“இந்தப் பின்னணியில், நெருங்கிய அண்டை நாடுகளாகவும், முக்கியமான நண்பர்களாகவும் உள்ள சீனாவும் சிங்கப்பூரும் ஒத்துழைப்பையும் பரிமாற்றங்களையும் வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று நான் உணர்கிறேன்,” என்றும் சீனப் பிரதமர் கூறினார்.

அதை ஆமோதித்த பிரதமர் வோங், “பதற்றமான உலகச் சூழ்நிலையில் நாம் நம்மிடையே மட்டுமல்லாமல், வட்டார ரீதியிலும் அனைத்துலக ரீதியிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்,” என்று கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்